For Daily Alerts
Just In
பகத் சிங்குக்கு நாடாளுமன்றத்தில் சிலை - சோம்நாத்
டெல்லி: தீரர் பகத்சிங்கின் சிலை நாடாளும்ற வளாகத்தில் வைக்கப்படும் என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பஞ்சாபைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரும், புரட்சி வீரனுமான பகத் சிங்கின் சிலை நாடாளுமன்ற வளாகத்தில் இதுவரை இல்லை. பகத் சிங்கின் சிலையை நாடாளுமன்ற வளாகத்தில் வைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் பகத் சிங்கின் சிலை நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்படவுள்ளதாக லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்த சிலை 18 அடி உயரத்தில் அமையவுள்ளது. புகழ் பெற்ற சிற்பி ராம் சுட்டர் இந்த சிலையை வடிவமைக்கவுள்ளார் என்றும் சோம்நாத் சாட்டர்ஜி தெரிவித்தார்.