For Daily Alerts
Just In
இஸ்ரேல் பெண்ணிடம் சில்மிஷம்-கண்டக்டர் கைது
கன்னியாக்குமரி : பஸ்ஸில் பயணம் செய்த வெளிநாட்டு பெண்ணிடம் சில்மிஷம் செய்த கண்டக்டரை போலீசார் கைது செய்தனர்.
இஸ்ரேல் நாட்டுப் பெண் ரினாட் ஆலோன். இவர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளார். கேரளாவில் இருந்து கன்னியாகுமரிக்கு அரசு பஸ்ஸில் பயணம் செய்தார். ஒரு சீட்டில் தனியாக அமர்ந்திருந்தார்.
கூட்டம் குறைந்த நிலையில் கண்டக்டர் சுரேந்திரன், ரினாட் ஆலோன் அருகில் அமர்ந்தார். ரினாட் ஆலோன் அதை கண்டுக்கொள்ளவில்லை.
சிறிது நேரம் கழித்து ரினாட் ஆலோனிடம் சுரேந்திரன் செக்ஸ் சில்மிஷம் செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ரினாட் ஆலோன், சுரேந்திரனைத் திட்டியுள்ளார்.
பின்பு கன்னியாகுமரி காவல் நிலையத்தில் சுரேந்திரன் மீது புகார் அளித்தார். இதையடுத்து, சுரேந்திரனை போலீசார் கைது செய்தனர்.