For Daily Alerts
Just In
கிறிஸ்டி குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு
சென்னை: இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட தங்கச்சி மடம் மீனவர் கிறிஸ்டியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ. 1 லட்சம் இழப்பீட்டுடன் இந்த நிதியும் சேர்த்துத் தரப்படும்.
தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் கிறிஸ்டி கடந்த 5ம் தேதி இலங்கை கடற்படை நடத்திய வெறித் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் கருணாநிதி, கிறிஸ்டியின் குடும்பத்துக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், கூடுதல் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று மீனவர் சங்கங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று கூடுதலாக ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.