For Daily Alerts
Just In
மதுரையில் கேஸ் தட்டுப்பாடு-மக்கள் அவதி
மதுரை: மதுரையில் நிலவி வரும் சமையல் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் பொது மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
பதிவு செய்து 30 நாட்களாகியும் கேஸ் சிலிண்டர்கள் வினியோகிக்கப்படுதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கேஸ் ஏஜென்ஸிகள் தங்களுக்கு வழங்க வேண்டிய சிலிண்டர்களை ஹோட்டல், டீ கடைகளுக்கும் அதிக லாபத்தில் விற்பனை செய்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து கேஸ் ஏஜென்ஸி நிர்வாகிகளிடம் கேட்டபோது, ஏழைகளுக்கு இலவச சமையல் கேஸ் இணப்பை தமிழக அரசு வழங்கி வருகிறது. இதனால்தான் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றனர்.