For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அழகர்கோவிலில் 50 பசுக்கள் பரிதாப சாவு

By Staff
Google Oneindia Tamil News

மதுரை: மதுரை அருகே உள்ள அழகர் கோவிலில், 50 பசுக்கள் முறையான பராமரிப்பு இல்லாமல் உயிரிழந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

மதுரை அருகே உள்ளது அழகர்கோவில். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள அழகர் கோவிலில் பக்தர்கள் தானமாக தரும் பசுக்களைப் பராமரித்துப் பாதுகாக்க கோ சாலை உள்ளது.

இங்குள்ள மாடுகள் சரிவர பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இங்கு மாடுகளை வைத்திருக்க போதிய இட வசதி இல்லை. தீவணப் பற்றாக்குறை நிலவுகிறது. நோய்கள் தாக்கினால் சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவர்கள் வசதி இல்ைல என்று பக்தர்கள் குமுறுகின்றனர்.

50 பசுக்கள் பரிதாப சாவு:

இந்த நிலையில் 50 பசுக்கள் முறையான பராரமரிப்பு இல்லாததால், நோய் தாக்கி உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது.

நேற்று மட்டும் நான்கு பசு மாடுகள் இறந்தன. தினசரி மாடுகள் இறப்பது இங்கு தொடர் கதையாகி வருவதாக பக்தர்கள் குமுறுகின்றனர்.

இங்குள்ள கோசாலையில் 150 பசுக்களை மட்டுமே வைத்திருக்க முடியும். ஆனால், மொத்தம் 400 மாடுகள் அடைக்கப்பட்டுள்ளனவாம். இந்தப் பசுக்களைப் பராமரிக்க போதிய ஊழியர்களும் இல்லை. நான்கு பேர் மட்டுமே பசுக்களைப் பார்த்துக் கொள்கிறார்களாம்.

மேய்ச்சலுக்குப் போதிய இடங்கள் இருந்தும் கூட மாடுகளுக்கு முறையாக தீவணமோ, புல்லோ கொடுப்பதில்ைல என்று கூறப்படுகிறது.

கோவிலில் நடைபெறும் விழாக்களின்போது மாடுகளை ஏலம் விட்டு கோவில் நிர்வாகம் பெரும் வருவாய் ஈட்டுகிறது. ஆனால் அந்த வருவாயில் ஒரு பகுதியைக் கூட கோ சாலை பராமரிப்புக்கு ஒதுக்குவதில்லையாம்.

இறைச்சிக்காக கடத்தல்:

இதை விடக் கொடுமையாக, இறைச்சிக்காக சில சமூக விரோதிகள், பசுக்களைக் கேரளாவுக்கு கடத்திச் செல்கிறார்களாம். அவர்களை தடுக்க கோவில் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கடந்த மாதம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் கோ சாலையில் 15 பசுக்கள் இதுபோல முறையான பராமரிப்பின்றி உயிரிழந்தன. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் சுவடு மறைவதற்குள் அழகர்கோவிலில் 50 பசுக்கள் இறந்திருக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

பக்தர்களால் தானமாக தரப்படும் பசுக்களை முறையாக பராமரித்து அவற்றுக்குப் போதிய கவனம் தரப்பட வேண்டும். பசுக்கள் கடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும், நோய் தாக்கிய பசுக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X