ராஜ்யசபா: இன்று வேட்பு மனு தாக்கல் முடிகிறது - போட்டி இருக்குமா?
சென்னை: தமிழக ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று முடிவடைகிறது. அதிமுக சார்பில் 2வது வேட்பாளர் நிறுத்தப்பட்டால் தேர்தலில் போட்டி ஏற்படும் என்பதால் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.
ராஜ்யசபாவுக்கு காலியாகும் 6 இடங்களுக்கு வருகிற மார்ச் 26ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் ஐந்து பேரும், அதிமுக சார்பில் ஒருவரும் தேர்ந்தெடுக்கப்பட முடியும்.
திமுக கூட்டணி தனது 5 வேட்பாளர்களையும் அறிவித்து விட்டது. அதிமுக கூட்டணி இரு இடங்களில் போட்டியிடப் போவதாக ஜெயலலிதா அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதிமுக கொடுத்த இடத்தில் போட்டியிட மதிமுக மறுத்து விட்டது.
இருப்பினும் சொன்னது போல ஜெயலலிதா இரண்டு வேட்பாளர்களை நிறுத்துவாரா என்பது குறித்து பரபரப்பு நிலவுகிறது.
இந்த நிலையில் இன்று வேட்பு மனு தாக்கல் முடிகிறது. அதன் பின்னரே போட்டி இருக்குமா, இல்லையா என்பது தெரிய வரும்.
அப்படி 6 பேருக்கு மேல் யாரும் மனுத் தாக்கல் செய்யாவிட்டால் போட்டியின்றி அவர்கள் 6 பேரும் தேர்வு செய்யப்படுவார்கள்.