For Daily Alerts
Just In
காரக்பூர் ஐஐடி-தலைவராக டாடா ஸ்டீல் முத்துராமன்
கொல்கத்தா: டாடா ஸ்டீல் நிறுவன நிர்வாக இயக்குநர் பி.முத்துராமன், காரக்பூர் ஐஐடியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காரக்பூர் ஐஐடியின் ஆளுநர் குழுவில் தற்போது முத்துராமன் உறுப்பினராக இருக்கிறார். இந்த நிலையில் ஆளுநர் குழுவின் தலைவராக தற்போது முத்துராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுதவிர பிரான்ஸைச் சேர்ந்த சி.இ.டி.இ.பி. நிர்வாகக் குழுவின் இயக்குநராகவும் முத்துராமன் பதவி வகிக்கிறார். ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த சேவியர் தொழில் உறவுக் கழகத்தின் ஆளுநர் குழுத் தலைவராகவும் இருக்கிறார். மேலும் ஜாம்ஷெட்பூர் தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (என்.ஐ.டி) தலைவராகவும் அவர் செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.