For Daily Alerts
Just In
தமிழக கேபிள் டிவி கழகத்துக்கு மத்திய அரசு 'ஓகே'
சென்னை: சென்னையில் கேபிள் டி.வி. கழகத்தின் சேவையை தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:
சென்னையில் கேபிள் டிவி சேவையை தொடங்குவதற்கு தமிழக அரசின் கேபிள் டிவி கழகத்துக்கு மத்திய ஒளிபரப்பு அமைச்சகம் நேற்று (ஏப்.2) அனுமதி வழங்கியது.
சென்னை பெருநகரம் என்பதால் மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டியிருந்தது. இதற்காக கடந்த 2007 நவம்பர் 23ம் தேதி மத்திய அரசிடம் விண்ணப்பித்தோம். அதன்படி அனுமதி கிடைத்துள்ளது.
தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் கேபிள் டிவி சேவையை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள மத்திய அரசின் அஞ்சல்துறையினரின் அனுமதியைப் பெற்றால் போதுமானது. அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.