For Daily Alerts
Just In
பணவீக்கம் 7% ஆனது-மத்திய அரசு பரிதவிப்பு
டெல்லி: நாட்டின் பணவீக்க விகிதம் 7 சதவீதத்தை தொட்டது. கடந்த 3 ஆண்டுகளில் இதுவே மிக அதிகபட்சமாகும்.
கடந்த வாரம் 6.68 சதவீதமாக இருந்த பணவீக்க விகிதம் இப்போது 7 சதவீதமாக உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து வங்கிகளிடம் உள்ள நிதிப் புழக்கத்தைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளது. இதற்காக வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருப்பு வைக்க வேண்டிய நிதி விகிதத்தை (CRR) அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
இந்நிலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கள்ளத்தனமாக வியாபாரிகள் பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படு்ம் என்று மத்திய வணிகத்துறை அமைச்சர் கமல்நாத் எச்சரித்துள்ளார்.