For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐ.நா வளர்ச்சி அமைப்பின் இயக்குனராக இந்தியர் நியமனம்

By Staff
Google Oneindia Tamil News

Ajay
ஜெனீவா: ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சி அமைப்பின் (United Nations Development Programme-UNDP) உதவி பொதுச் செயலாளராகவும், ஆசியா பசிபிக் பிராந்திய வளர்ச்சி செயலகத்தின் உதவி இயக்குநராகவும் அஜய் சிப்பர் என்ற இந்தியர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐநா பொதுச் செயலாளர் பான் கி-மூன் உத்தரவின்பேரில் இந்தப் பதவிகளில் அஜய் சிப்பர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு இந்த பொறுப்புகளை வகித்த ஹபிஸ் பாஷா பதவிக்காலம் கடந்த டிசம்பர் மாதத்தில் முடிவடைந்தது.

உலக அளவில் அசுரத்தனமாக வளர்ச்சியடைந்து வரும் ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் ஐ.நா. அமைப்பின் தலைவராக ஒரு இந்தியர் பொறுப்பேற்பது குறிப்பிடத்தக்கது.

உலக வங்கியில் பல்வேறு பொறுப்புகளில் கடந்த 25 ஆண்டுகாலமாக பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர் அஜய் சிப்பர். முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்கும் பொறுப்புகளையும் அவர் மேற்பார்வையிட்டுள்ளார்.

இந்திய திட்டக் கமிஷன் உறுப்பினராகவும், டெல்லி பல்கலை பொருளாதார பேராசிரியராகவும் அஜய் இருந்துள்ளார்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதார முதுகலைப்பட்டமும், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.

1997ல் உலக வளர்ச்சி அறிக்கை தயாரிப்பு குழுவில் இடம் பெற்றிருந்தார். உலகவங்கியின் மூத்த பொருளாதார நிபுணராக இருந்த பெருமையையும் பெற்றுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X