For Daily Alerts
Just In

குளத்தில் மூழ்கி சகோதரர்கள் உள்பட 3 சிறுவர்கள் பலி
காஞ்சிபுரம்:குளத்தில் குளிக்க சென்ற சகோதரர்கள் உள்பட 3 பள்ளி மாணவர்கள் அதில் மூழ்கி உயிரிழந்தனர்.
செங்கல்பட்டு அருகே உள்ள திருக்கச்சூரைச் சேர்ந்தவர்கள் லோகேஷ் (14), அவரது சகோதரர் கோபிநாத் (12) மற்றும் டெல்லிராஜ் (14). அருகில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக 3 பேரும் சென்றனர். குளத்தின் ஆழமான பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது 3 பேரும் நீரில் மூழ்கி இறந்தனர்.
தண்ணீரில் மிதந்த உடல்களை பார்த்து அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். உடல்களை மீட்டு செங்கல்பட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
Comments
Story first published: Saturday, April 19, 2008, 16:14 [IST]