சிறுமிகள் கற்பழிப்பு வழக்கிலிருந்து சுங்க அதிகாரி விடுதலை
சென்னை: சிறுமிகளை தத்தெடுத்து பின்னர் அவர்களை பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கியதாக கூறி கைது செய்யப்பட்ட சுங்கத்துறை அதிகாரி ராதாகிருஷ்ணன் நிரபராதி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்ைதப் பெரும் பரபரப்பில் ஆழ்த்திய வழக்கு ராதாகிருஷ்ணன் வழக்கு. சுங்கத்துறை அதிகாரியான இவர் சிறுமிகளை தத்தெடுத்து வளர்ப்பதாக கூறி அவர்களை பாலியல் சித்திரவதைக்கு ஆளாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
நான்கு சிறுமிகளைக் கற்பழித்ததாக கூறி ராதாகிருஷ்ணன், பெருமாள், சரசா, கிட்டு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர் மீது சென்னை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி சம்பத் நேற்று ராதாகிருஷ்ணன் நிரபராதி என அறிவித்து விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.
ராதாகிருஷ்ணனை விட்டுப் பிரிந்து வாழும் மனைவி கோமளவல்லிதான் இதற்குக் காரணம். அவர் மீது அவதூறான புகாரை அளிக்க அவர்தான் தூண்டி விட்டுள்ளார். அவர் மீதான புகார்கள் பொய்யானவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளன என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.