கர்நாடகத்தில் மெஜாரிட்டி கிடைக்காவி்ட்டால்..அத்வானி

பிரச்சாரத்துக்காக பெங்களூர் வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையி்ல்,
2004ம் ஆண்டு தேர்தலில் ஏற்பட்டது போல தொங்கு சட்டசபை ஏற்படாமல் தவிர்க்கு வாய்ப்பும் கடமையும் கர்நாடக மக்களுக்கு உள்ளது.
காங்கிரஸ் சந்தர்ப்பவாத வைரசும் மதசார்பற்ற ஜனதா தளத்தின் முதுகில் குத்தும் போக்கும் கர்நாடக வளர்ச்சியை பாதித்துள்ளது.
இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கும் என்று நம்புகிறோம். காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள ஆட்சியைப் பார்த்துவிட்ட மக்கள் எங்களுக்கும் ஒரு வாய்ப்பு தர வேண்டும்.
அப்படி தனி மொரிட்டி கிடைக்காவிட்டால் எதிர்க் கட்சி வரிசையில் அமர்வோம் என்றார்.
கர்நாடகத்தில் பாஜக சார்பில் போட்டியிட நில முதலைகளுக்கும் பெரும் ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகளுக்கும் தான் அதிக வாய்ப்பு தரப்பட்டுள்ளதே என்று கேட்டதற்கு, அப்படியெல்லாம் இல்லை என பதிலளித்த அத்வானி, மாநில தலைமை ஒருமனதாக தேர்வு செய்த வேட்பாளர்கள் தான் நிறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
விலைவாசியைக் கட்டுப்படுத்தத் தவறி மத்திய அரசு, அதற்கான விலையைத் தர வேண்டிய அவசியம் மிக விரைவில் வரும். முதல் கட்டமாக கர்நாடகத்தில் காங்கிரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றார்.