For Daily Alerts
Just In
'சச்சின்' கருணாநிதி, 'டோணி' ஸ்டாலின் - 'அவுட்' கொடுக்கும் வீராசாமி!
சென்னை: முதல்வர் கருணாநிதி சச்சின் டெண்டுல்கர் என்றார், உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் டோணியைப் போல செயல்படுகிறார் என்று திமுக எம்.எல்.ஏ ஆண்டிமடம் சிவசங்கர் சட்டசபையில் கூறினார்.
சட்டசபையில் நேற்று ஆண்டிமடம் தொகுதி திமுக எம்.எல்.ஏ சிவசங்கர் பேசுகையில், கிரிக்கெட்டில் சாதனை படைத்த நிதான ஆட்டக்காரர்களும், அதிரடி ஆட்டக்காரர்களும் உள்ளனர்.
முதல்வர் கருணாநிதி சச்சின் டெண்டுல்கர் என்றால், அமைச்சர் மு.க.ஸ்டாலின் டோணியைப் போல செயல்படுகிறார்.
நாங்கள் எல்லாம் சிக்ஸர் அடிப்பாரா, பவுண்டரி அடிப்பாரா என்று எதிர்பார்த்திருந்தால் சில நேரம் நடுவராக விளங்கும் ஆற்காடு வீராசாமி அவுட் கொடுத்து விடுகிறார் என்று கூறியபோது பலத்த சிரிப்பலை எழுந்து அடங்கியது.