கையெழுத்து சரியில்லை! - நீதிபதிக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!!
டெல்லி: படிக்கும் வகையில் தெளிவாக தீர்ப்பை எழுதும்படி கீழ் நீதிமன்ற நீதிபதிக்கு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெட்ரிஸ் இன்போடெக் லிட் என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அதில் மெட்ரோபாலிடன் மேஜிஸ்திரேட் நீதிமன்றம், தங்களுக்கு ஜாமினில் வெளிவர முடியாத வாரன்ட்டை பிறப்பித்துள்ளது. அது எதிரானது, அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனுவை நீதிபதி விபின் சங்கி விசாரித்தார். அப்போது, கீழ் நீதிமன்ற தீர்ப்பு அறிக்கையை நீதிபதி படித்து பார்த்தார். ஆனால் தீர்ப்பை படிக்க முடியாமல் திணறினார் நீதிபதி. காரணம் அந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதியின் கையெழுத்து அவருக்குப் புரியவில்லை.
இதனால் டென்ஷனான நீதிபதி பவிபின் சங்கி, மெட்ரோபாலிடன் மேஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு படிப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. புரியும் வகையில் தீர்ப்பை எழுத வேண்டும். அவர் மட்டும் படித்தற்கல்ல தீர்ப்பு. அதை யார், எப்போது படித்தாலும் புரிய வேண்டும். புரியும்படி எழுத அவர் பழக வேண்டும் என்று அறிவுரை கூறினார்.