For Daily Alerts
Just In
அமீரக தமிழர்கள் அமைப்பு தலைவருக்கு யுஎஸ் பல்கலை டாக்டர் பட்டம்

அமீரகத் தமிழர்கள் அமைப்பின் கௌரவத் தலைவர் அஜ்மான் மூர்த்தி. அஜ்மான் பகுதியில் மட்டுமல்லாது அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தமிழர்கள் இன்னலுறும் போது அவர்களுக்காக சாதி, மதம் பாகுபாடில்லாது பல்வேறு உதவிகளைச் செய்து வருபவர்.
இவரது சமூக சேவையினைப் பாராட்டி பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளன. தற்பொழுது அமெரிக்காவில் உள்ள காஸ்மோபாலிட்டன் பல்கலைக்கழகம் சமூக சேவைக்கான டாக்டர் பட்டத்தினை வழங்கியுள்ளது.
சமூகசேவைக்கான டாக்டர் பட்டம் பெற்ற அஜ்மான் மூர்த்தியினை அமீரகத் தமிழர்கள் அமைப்பின் தலைவர் அமுதரசன், செயலாளர் சைபுதீன், இணைச் செயலாளர் முஸ்தாக் அஹ்மது, பொருளாளர் நயீம், ஒருங்கிணைப்பாளர் ரயீஸ், செயற்குழு உறுப்பினர்கள் அன்பழகன், சலீம், செந்தில், பாரத், ஹமீது யாசின் உள்ளிட்ட பல்வேறு சமூகசேவை அமைப்புகளின் நிர்வாகிகள் வாழ்த்தினர்.