For Daily Alerts
Just In
தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் அனாதையான சிசு!
காஞ்சிபுரம்: பிறந்து சில மணி நேரங்களே ஆன, தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில், ஒரு குழந்தை காஞ்சிபுரம் பெட்ரோல் பங்க் அருகே அனாதயாக விடப்பட்டது. அதை போலீஸார் மீட்டனர்.
பிளாஸ்டிக் கவரில் வைத்து சுற்றப்பட்ட நிலையில் அந்த சிசு காணப்பட்டது. தொப்புள் கூட அறுக்கப்படவில்லை. உடல் முழுவதும் ரத்தக் கறையாக காணப்பட்டது. பிறந்தவுடன் இந்தக் குழந்தையை வீசியிருக்கலாம் என சந்தேககிக்கப்படுகிறது.
காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் பக்கத்தில் இந்தக் குழந்தை பரிதாபமாக கிடந்தது. பெட்ரோல் பங்க் ஊழியர்கள் குழந்தையைப் பார்த்து விட்டு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸார் விரைந்து வந்து குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிகிச்சைக்குப் பின்னர் அக்குழந்தை அரசு குழந்தைகள் நல மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.