For Daily Alerts
Just In
இந்தியாவின் இறையாண்மையை மத்திய அரசு விற்று விட்டது: மோடி
காந்திநகர்: இந்தியாவின் இறையாண்மையை விட்டுக் கொடுத்து விட்டு அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தத்ைத மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
காந்தி நகரில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அணு சக்தி ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்காக அணு ஆயுத சோதனையை இனி நடத்த மாட்டோம் என மத்திய அரசு உறுதியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் இறையாண்மையை அமெரிக்காவிடம் விற்று விட்டது மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு.
ஆனால் நமது அண்டை நாடுகளான, எப்போதும் ஆபத்தாக இருக்கும் சீனா, பாகிஸ்தான் ஆகியவற்றுக்கு அணு ஆயுத சோதனையை நடத்த எந்தவித தடையும் இல்லை. இதனால் இந்தியாவின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது என்றார் மோடி.