For Quick Alerts
For Daily Alerts
Just In
பெங்களூருக்கு கடத்தவிருந்த 250 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்
திருவண்ணாமலை: பெங்களூருக்கு கடத்தப்பட இருந்த 250 ரேஷன் அரிசி மூட்டைகள் திருவண்ணாமலை அருகே பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரத்தில் இருந்து பெங்களூருக்கு ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவண்ணாமலை செங்கம் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை போலீஸார் மடக்கி சோதனையிட்டனர். அதில் 250 ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அரிசி கடத்தப்பட இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அரிசி மூட்டைகளையும் லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். லாரி டிரைவர் மற்றும் கிளீனரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.