For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரொக்க இருப்பு விகிதத்தைக் குறைத்தது ரிசர்வ் வங்கி!

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த வாரம் நாட்டின் பணவீக்கம் லேசாகக் குறைந்ததைத் தொடர்ந்து இந்திய ரிசர்வ் வங்கி தனது இறுக்கமான பணவியல் கொள்கையை லேசாகத் தளர்த்திக் கொண்டுள்ளது.

முதல் நடவடிக்கையாக, வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதம் சிஆர்ஆரை 9 சதவிகிதத்திலிலிருந்து 8.5 சதவிகிதமாகக் குறைத்துள்ளது. அக்டோபர் 11-ம் தேதி முதல் இந்த புதிய ரொக்க இருப்பு விகிதம் அமலுக்கு வருகிறது.

இதன் மூலம் வங்கிகளுக்கு மேலும் கூடுதல் ரொக்க இருப்பு அனுமதிக்கப்படுகிறது. கடன் வழங்கலில் சற்று கூடுதல் நெகிழ்வுத் தன்மையைக் கொண்டு வரவே இந்த நடவடிக்கை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் ரிசர்வ் வங்கி ரொக்க இருப்பு விகிதத்தைக் குறைப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருப்பது இதுவே முதல் முறை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X