For Daily Alerts
Just In
பாலஸ்தீனத்திற்கு இந்தியா 20 மில்லியன் டாலர் நிதியுதவி
டெல்லி: பாலஸ்தீனத்திற்கு இந்தியா 20 மில்லியன் டாலர் நிதியுதவியை அறிவித்துள்ளது.
பாலஸ்தீன அதிபர் மஹமூத் அப்பாஸ் டெல்லி வந்துள்ளார். நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது பாலஸ்தீனத்திற்கான 20 மில்லியன் டாலர் நிதியுதவியை இந்தியா அறிவித்தது.
அதன்படி பாலஸ்தீனத்தின் உடனடி தேவைகளுக்காக 10 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மேலும், வளர்ச்சித் திட்டங்களுக்கு 10 மில்லியன் டாலர் நிதியுதவியை இந்தியா அறிவித்துள்ளது.
நேற்றைய நிகழ்ச்சியின்போது, புதிய பாலஸ்தீன தூதரகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. இதில் மன்மோகன் சிங்கும், மஹமூத் அப்பாஸும் கலந்து கொண்டனர்.