குடும்பத் தகராறு: கணவன் காதை அறுத்தார் மனைவி
ஜம்மு: குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட ஆத்திரத்தில் கணவனின் காதை அறுத்துவிட்டார் மனைவி. இந்த சம்பவம் காஷ்மீர் மாநிலத்தில் நடந்ததது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஜம்மு அருகே வசிப்பவர் மொஹிந்தர் சிங். இவரது மனைவி ஜஸ்விந்தர் கவுர். எல்லா குடும்பத்திலும் நடப்பது போல இவர்களின் குடும்பத்திலும் ஏதோ பிரச்சனை.
கணவன் மனைவியிடையே வாக்குவாதம் வலுத்தது. இதில் ஆத்திரமடைந்த ஜஸ்விந்தர், கணவரின் காதை அறுத்து எடுத்து விட்டார். இதனால் வலி தாங்காமல் மொஹிந்தர் அலறித் துடித்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், மொஹிந்தர் காது இல்லாமல் கதறிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அவரை மீட்டு உடனே அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மொஹிந்தருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஜஸ்விந்தர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தப்புன்னா காதையும் அறுப்பாள் பத்தினி ...!