புலிகளுக்குத் தடை: ஆஸ்திரேலியா பரிசீலனை
சிட்னி: விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆஸ்திரேலியாவில் தடை செய்ய வேண்டும் எனும் இலங்கையின் வேண்டுகோள் பரிசீலிக்கப்படும் என ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.
புலிகள் அமைப்பை சட்டவிரோதமான இயக்கம் என விரைவில் அறிவிப்பது குறித்து ஆஸ்திரேலியா பரிசீலித்து வருவதாக அதன் வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து வரும் இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித் பொகலகாமா, ஸ்டீபன் ஸ்மித்தை சந்தித்துப் பேசினார்.
அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளதைப் போல ஆஸ்திரேலியாவில் செய்யப்பட வேண்டும் என அப்போது பொகலாமா கேட்டுக் கொண்டார்.
ஏற்கனவே விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளுக்கு ஆஸ்திரேலியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டிய ஸ்டீபன், அதற்கடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தார்.