For Daily Alerts
Just In
ஜெர்மன் சிறுமி பலாத்காரம்: கோவா அமைச்சர் மகன் மீது புகார்

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர் படேலா ப்யூக்ஸ். இவர் தனது 14 வயது மகளுடன் நீண்ட கால விசாவில் கோவா தங்கியுள்ளார்.
இந் நிலையில் கோவா அமைச்சர் அடானாசியோ மான்சரேட்டின் மகன் ரோஹித் மான்சரேட் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக படேலா போலீஸில் புகார் செய்துள்ளார்.
முதலில் நட்போடு பழகிய ரோஹித் பின்னர் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்து டார்ச்சர் செய்ததாக தாயார் புகார் தந்துள்ளார்.
இதையடுத்து ரோஹித் மீது கோவா சிறுவர் சட்டத்தின்படி பாலியல் பலாத்காரம், ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியது போன்ற குற்றப் பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விரைவில் அவர் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது.