For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்ட மாணவர்கள் உண்ணாவிரதம் வாபஸ்

By Sridhar L
Google Oneindia Tamil News

செங்கல்பட்டு: இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி செங்கல்பட்டியில் உண்ணாவிரதம் இருந்த சட்டக் கல்லூரி மாணவர்கள் தங்களது போராட்டத்தை விலக்கிக் கொண்டுள்ளனர்.

இலங்கை போர் நிறுத்தத்தை வலியுறுத்தி செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் 14 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை கடந்த 22ம் தேதி துவங்கினார்கள். இதில் 6 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர். அவர்கள் தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மீதமுள்ள 8 மாணவர்கள் இன்று 7-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். அவர்களின் நாடித்துடிப்பை பரிசோதித்த டாக்டர்கள் அவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பது அவசியம் என தெரிவித்தனர்.

இதையடுத்து உணணாவிரத இடத்துக்கு சென்ற போலீசார் 8 மாணவர்களையும் அலேக்காக தூக்கி போலீஸ் வேனில் ஏற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அப்போது சில மாணவர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு, ஆஸ்பத்திரியில் குளுகோஸ் ஏற்றினார்கள். சிறிது நேரத்தில் மாணவர்கள் சுய நினைவுக்கு வந்ததும், குளுகோஸ் குழாய்களை பிடுங்கி எறிந்து விட்டனர். சிகிச்சையை ஏற்க அவர்கள் மறுத்து விட்டனர்.

மருத்துவமனையில் தொடர்ந்து உண்ணாவிரதத்தை கடைப்பிடித்து வந்தனர். இந்த நிலையில் இன்று மாலையில் அவர்கள் தங்களது உண்ணாவிரதத்தைக் கைவிடுவதாக அறிவித்தனர்.

உண்ணாவிரதத்தில் சேலம் மாணவர்கள் ..

இதற்கிடையே, சேலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

முன்னாள் நாட்டாண்மைக் கழக அலுவலகம் முன்பு பந்தல் போட்டு உண்ணாவிரதப் போராட்டத்தை அவர்கள் தொடங்கியுள்ளனர்.

முன்னதாக 3 நாட்களுக்கு முன்பு கெம்புகுமார், ஆறுமுக நயினார், ஆகியோர் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று திருமுருகன், துரியன் ஆகிய இரு மாணவர்கள் மயக்கமடைந்தனர். அனைவரும் செங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இன்று மேலும் 2 பேர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடிகர்கள் வடிவேலு, மனோபாலா, இயக்குநர்கள் சுந்தர்.சி, ஆர்.கே.செல்வமணி, ஷரவண சுப்பையா, கெளதமன் உள்ளிட்டோர் உண்ணாவிரதப் பந்தலுக்கு விரைந்து வந்து மாணவர்களைச் சந்தித்தனர்.

அவர்களிடம் பரிவுடன் பேசிய அவர்கள் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். அதற்கு மாணவர்கள், யார் சொன்னாலும் கைவிட மாட்டோம். ஒரு வேளை எங்களைப் பின்பற்றி மாணவர்கள் யாரேனும் உண்ணாவிரதத்தில் குதித்தால் அவர்கள் நலன் கருதி நாங்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்வோம் என்று கூறி விட்டனர்.

முன்னதாக திரையுலகினர் கருப்புச் சட்டையுடன் செங்கல்பட்டு பஸ் நிலையத்திலிருந்து அரசு மருத்துவமனைக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வரும் மாணவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தனர்.

சந்திப்புக்குப் பின்னர் வடிவேலு கூறுகையில், இந்த மாணவர்களை பாராட்டுகிறேன். ஆனால் அவர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும். மத்திய அரசும், தமிழர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ஆர்.கே.செல்வமணி ஆவேசத்துடன் பேசுகையில், இங்கிருக்கும் ஒருவருக்கு ஏதாவது ஏற்பட்டால் கூட ஒட்டுமொத்த திரையுலகையும் திரட்டி மிகப் பெரும் போராட்டததை நடத்துவோம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X