ஒபாமாவின் மத நல்லுறவு குழுவில் இந்தியர்

Subscribe to Oneindia Tamil

Eboo Patel
வாஷிங்டன்: ஓபாமாவின் மத நல்லுறவுக்கான ஆலோசனைக் குழுவில் இந்திய அமெரிக்கரான எபூ படேல் இடம் பெற்றுள்ளார்.

அமெரிக்க அரசின் புதிய மத நல்லுறவு ஆலோசனைக் குழுவை ஒபாமா அறிவித்துள்ளார். இதில், சிகாகோவைச் சேர்ந்த பல்வேறு மதங்களுக்கிடையிலான இளைஞர் அமைப்பின் நிறுவனரும், செயல் இயக்குநருமான எபூ படேல் உறுப்பினராக இடம் பெற்றுள்ளார்.

இந்தக் குழுவில் மொத்தம் 25 பேர் இடம் பெறுகின்றனர். ஒரு வருடத்திற்கு இவர்கள் இப்பொறுப்பை வகிப்பார்கள். 6ம் தேதி குழுவின் 15 உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டனர்.

அமெரிக்காவில் உள்ள அனைத்து மதத்தினர், இனத்தவரை அரவணைத்து செல்வது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து அதிபருக்கு இந்த குழு ஆலோசனை கூறும்.

இந்தக் குழுவின் தலைவராக அமெரிக்க செனட் சபையில் அதிபருக்கமான ஆலோசகரான பாதிரியார் ஜோசுவா டுபாய்ஸ் செயல்படுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+