For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரயில் கட்டணம் 2% குறைப்பு: தமிழகத்திற்கு 5 ரயில்கள்

By Sridhar L
Google Oneindia Tamil News

Lalu with interim Railway Budget
டெல்லி: ரயில்வே இடைக்கால பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் அனைத்து ரயில்களின் கட்டணமும் 2 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ஐந்து புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

43 புதிய ரயில்கள் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை- பெங்களூர், ஹைதராபாத்-விஜயவாடா-சென்னை ஆகிய தடங்களி்ல் புல்லட் ரயில்கள் விடுவதற்கான சாத்தியம் குறித்து ஆய்வுகள் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது லாலு பிரசாத் தாக்கல் செய்துள்ள 6வது ரயில்வே பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் தாக்கல் செய்து லாலு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:

பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உலகையே அதிர வைத்துக் கொண்டிருக்கும் நிலையிலும், ரயில்வே துறையின் மொத்த வருமானம் இந்த நிதியாண்டின் முதல் பத்து மாதங்களில் 13.7 சதவீத உயர்வைக் கண்டுள்ளது. ரயில்வேயின் வருமானம் இந்த காலகட்டத்தில் ரூ. 64 ஆயிரத்து 876.34 கோடியாகும்.

சரக்கு வருவாய் ரூ. 38,734.12 கோடியிலிருந்து ரூ. 44,016.26 கோடியாக எகிறியுள்ளது. இது 13.64 சதவீதம் அதிகமாகும்.

பயணிகள் வருவாய் ரூ. 16,134.94 கோடியிலிருந்து ரூ. 18,042.82 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 11.82 சதவீதம் அதிகுமாம்.

இந்த ஆண்டு ரயில்வே ஈட்டிய மொத்த லாபம் ரூ. 25,000 கோடி

தமிழகத்திற்கு ஐந்து ரயில்கள்

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஐந்து ரயில்கள் கிடைத்துள்ளன.

- பிலாஸ்பூர் - நெல்லை வாராந்திர எக்ஸ்பிரஸ் (திருவனந்தபுரம் வழி)

- செங்கோட்டை - ஈரோடு தினசரி பாசஞ்சர்.

- திருச்சி - மதுரை தினசரி எக்ஸ்பிரஸ்.

- மும்பை - நெல்லை சூப்பர்பாஸ்ட். திருவனந்தபுரம் வழி. (வாரம் இருமுறை)

- கோவை - தூத்துக்குடி இணைப்பு ரயில் (தினசரி)

இதுதவிர ஜோத்பூர் - மங்களூர் ரயில் கோவை வரை நீட்டிக்கப்படுகிறது.

எர்ணாகுளம் - திருச்சி இடையிலான ரயில், நாகூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வேசன் இல்லாத இ-டிக்கெட்:

இணையத் தளம் மூலம் இனி ரிசர்வ் செய்யப்படாத டிக்கெட்டையும் இ-டிக்கெட்டாக பெறவும் அனுமதிக்கப்படும். இதன்மூலம் டிக்கெட் கன்பர்ம் ஆகாவிட்டாலும் இந்த இ-டிக்கெட்டைக் கொண்டு பொது பெட்டிகளில் பயணிக்கலாம்.

பட்ஜெட் முக்கிய அம்சங்கள்:

- 2008-09 வருவாயில் 14 சதவீத வளர்ச்சி
- ரயில்களில் இனி மர இருக்கைகளுக்கு பதில் குஷன்
- 'கரீப் ரத்': ஏழைகளுக்கு மேலும் சொகுசு ரயில்கள்
- ரயில்வே விசாரணைகளுக்கு தனி கால்சென்டர்கள்
- 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில் ரயில்வேயின் பங்களிப்பு ரூ.2,30,000 கோடி
- கடந்த 5 ஆண்டுகளில் ரூ.90,000 கோடி லாபம்
- அனைத்து ரயில் கட்டணம் 2 சதவீதம் குறைப்பு
- சரக்கு ரெயில் கட்டணம் மாற்றமில்லை
- 43 புதிய ரயில்கள்

புல்லட் ரயில்கள்:

- சென்னை- பெங்களூர், டெல்லி- அமிர்தசரஸ், அகமதாபாத்-புனே, ஹைதராபாத்-விஜயவாடா-சென்னை, டெல்லி-பாட்னா, கொல்கத்தா-ஹால்தியா, எர்ணாகுளம்-ஹெளரா ஆகிய தடங்களி்ல் புல்லட் ரயில்களுக்கான சாத்தியம் குறித்து ஆய்வு தொடக்கம்.
- சரக்கு ரெயில் கொள்ளளவு 78 சதவீதம் உயர்த்த முடிவு
- குளிர்சாதன வகுப்புக் கட்டணமும் குறைப்பு
- லூதியானா - கொல்கத்தா, டெல்லி - மும்பை மார்க்கத்திலான சரக்கு ரயில் போக்குவரத்துக்கான பணிகள் தொடக்கம்.

இந்த பட்ஜெட்டில் தமிழகத்துக்கு பெரிய அளவி்ல் திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X