For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதி நாளை காலை டிஸ்சார்ஜ் ஆகிறார்

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: மருத்துவமனையில் முதுகு ஆபரேஷன் செய்து கொண்டு ஓய்வெடுத்து வந்த முதல்வர் கருணாநிதி நாளை காலை டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புகிறார்.

இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

முதல்-அமைச்சர் கருணாநிதி கடந்த 26-ந் தேதி கடுமையான முதுகுவலி காரணமாக, சென்னை போரூர் ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு- கடந்த 11ம் தேதி மிகப்பெரிய அறுவை சிகிச்சைக்கு ஆளாகி, பூரண நலம் பெற்று நாளை காலை 9 மணியளவில் மருத்துவமனையில் இருந்து இல்லம் திரும்புகிறார்.

ஓய்வெடுக்க மருத்துவர்கள் கண்டிப்பு:

மிகப்பெரிய அறுவை சிகிச்சை என்பதால், முதல்-அமைச்சர் கருணாநிதி இல்லம் திரும்பினாலும் மேலும் சில வாரங்களுக்கு கண்டிப்பாக ஓய்வெடுத்தே ஆக வேண்டுமென்று மருத்துவர்கள் கண்டிப்பாக நிபந்தனை விதித்துள்ளார்கள்.

எனவே, பார்வையாளர்கள் மேலும் சில நாட்களுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு ஓய்வளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அன்பகத்தை திறந்து வைக்கிறார்:

இதற்கிடையே புதுப்பிக்கப்பட்ட திமுக இளைஞர் அணி செயலகமான அன்பகத்தை முதல்வர் கருணாநிதி நாளை திறந்து வைக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தி.மு.க. பொருளாளரும், இளைஞர் அணிச்செயலாளருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

புதுப்பிக்கப்பட்டுள்ள அன்பகம் தி.மு.க. இளைஞர் அணி அலுவலகமாக பயன்படுத்திக்கொள்ள அலுவலகம் மற்றும் அண்ணா மன்றம் என்ற பெயரில் அரங்கம் அமைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை முதல்-அமைச்சர் கருணாநிதியால், பொதுச்செயலாளர் க. அன்பழகன் தலைமையில் திறக்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மாநில, மாநகர, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள்-துணை அமைப்பாளர்கள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X