For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் ஓய்ந்தது பிரசாரம்-13ம் தேதி தேர்தல்

By Staff
Google Oneindia Tamil News

Tamil Nadu
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 5வது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.

மொத்தம் ஐந்து கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது.

இதில், முதல் கட்டமாக ஏப்ரல் 16ம் தேதி 124 தொகுதிகளுக்கும், 2ம் கட்டமாக 23ம் தேதி 141 தொகுதிகளுக்கும், 3ம் கட்டமாக 30ம் தேதி 107 தொகுதிகளுக்கும், 4வது கட்டமாக மே 7ம் தேதி 85 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது.

இதையடுத்து 5 மற்றும் இறுதி கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்பட 9 மாநிலங்களில் உள்ள 86 தொகுதிகளுக்கு மே 13ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இதில் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இதற்கான தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வந்தது.
இந்த அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது.

தேர்தல் நாளை மறுநாள் நடைபெற இருப்பதால், தேர்தல் ஆணைய விதிப்படி இன்று மாலை 5 மணிக்குப் பிறகு, யாரும் பொதுக்கூட்டங்களோ, தெருமுனைக் கூட்டங்களோ நடத்தக் கூடாது. சைகை மூலமாகவோ, வாய்வழியாகவோ யாரிடமும் ஓட்டு கேட்கக் கூடாது.

வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டருக்குள்ளாக இருக்கும் விளம்பரங்கள் அழிக்கப்படும். அந்த இடத்தில் கொடிகள், தோரணங்களை கட்டக்கூடாது. பூத் ஸ்லிப் தருகிறோம் என்ற பெயரில், வாக்காளர்களிடம் ஓட்டு கேட்கக் கூடாது.

மாலை 5 மணிக்குப் பிறகு, ரேடியோவிலோ, தொலைக்காட்சிகளிலோ விளம்பரம் செய்யக்கூடாது.

ஜெ. நேற்றே பிரசாரத்தை முடித்தார்..

அதிமுக கூட்டணி்க்கான பிரசாரத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்றுடன் நிறைவு செய்து விட்டார்.

பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் 40 தொகுதிகளிலும் பிரசாரம் செய்து முடித்துவிட்டார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் தமிழகத்தை சுற்றி வந்து விட்டார்.

நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சென்னையில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றார். அவருடன் முதல்வர் கருணாநிதியும் கலந்து கொண்டு பேசினார்.

பாஜக சார்பில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்ட அகில இந்தியத் தலைவர்கள் பிரசாரம் செய்துள்ளனர்.

இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவதையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

தமிழகம், புதுச்சேரியில், களம் காணும் முக்கிய வேட்பாளர்கள் ..

திமுக

• ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு
• நீலகிரி (தனி) - ராசா.
• மதுரை - மு.க.அழகிரி.
• கரூர் - கே.சி.பழனிச்சாமி.
• நாகப்பட்டனம் (தனி)- ஏ.கே.எஸ்.விஜயன்.
• அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்.
• தென் சென்னை - ஆர்.எஸ்.பாரதி.
• வட சென்னை - டி.கே.எஸ். இளங்கோவன்
• மத்திய சென்னை - தயாநிதி மாறன்.
• கிருஷ்ணகிரி - சுகவனம்.
• பெரம்பலூர் - நெப்போலியன்.
• தஞ்சாவூர் - பழனிமாணிக்கம்.
• ராமநாதபுரம் - ஜே.கே.ரித்தீஷ்.

காங்கிரஸ்

• புதுச்சேரி - நாராயணசாமி
• ஆரணி - எம். கிருஷ்ணசாமி
• கடலூர் - கே.எஸ்.அழகிரி
• திருப்பூர் - கார்வேந்தன்
• மயிலாடுதுறை - மணிசங்கர அய்யர்
• தேனி - ஆரூண்
• திருச்சி - சாருபாலா தொண்டமான்
• கோவை- பிரபு
• சிவகங்கை - ப.சிதம்பரம்
• ஈரோடு - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
• திண்டுக்கல் - என்.எஸ்.வி.சித்தன்
• சேலம் - கே.வி. தங்கபாலு

விடுதலைச் சிறுத்தைகள்

• சிதம்பரம்- திருமாவளவன்

அதிமுக

• சிவகங்கை- கண்ணப்பன்
• ராமநாதபுரம்- சத்தியமூர்த்தி
• மயிலாடுதுறை- மணியன்
• கரூர்- தம்பித்துரை
• சேலம்- செம்மலை
• தூத்துக்குடி- சிந்தியா
• தேனி- தங்க தமிழ்ச்செல்வன்

பாமக

• ஸ்ரீபெரும்புதூர் - ஏ.கே.மூர்த்தி.
• அரக்கோணம் - ஆர்.வேலு
• திருவண்ணாமலை - காடுவெட்டி குரு
• சிதம்பரம் - பொன்னுச்சாமி
• தர்மபுரி - செந்தில்
• புதுச்சேரி - ராமதாஸ்
• கள்ளக்குறிச்சி - தன்ராஜ்

மதிமுக

• விருதுநகர்- வைகோ

சிபிஎம்

• கன்னியாகுமரி - பெல்லார்மின்
• மதுரை - மோகன்

சிபிஐ

• வட சென்னை- தா.பாண்டியன்
• நாகை- செல்வராஜு

பாஜக

• தென் சென்னை- இல.கணேசன்
• ராமநாதபுரம்- திருநாவுக்கரசர்
• கன்னியாகுமரி- பொன்.ராதாகிருஷ்ணன்
• வட சென்னை- தமிழிசை சவுந்தரராஜன்
• திருச்சி - லலிதா குமாரமங்கலம்

நாடாளும் மக்கள் கட்சி

விருதுநகர் - கார்த்திக்

தேமுதிக

• வேலூர் - செளகத் ஷெரீப்
• கள்ளக்குறிச்சி - சுதீஷ்
• சேலம்- அழகபுரம் மோகன்ராஜ்
• கடலூர் - முன்னாள் அமைச்சர் தாமோதரன்.
• விருதுநகர்- க. பாண்டியராஜன்
• ராமநாதபுரம் - சிங்கை ஜின்னா.
• திருநெல்வேலி - எஸ். மைக்கேல் ராயப்பன்
• கன்னியாகுமரி- எஸ். ஆஸ்டின்
• புதுச்சேரி - கே.ஏ.யூ. அசனா.

பிற முக்கிய வேட்பாளர்கள்..

மமதா பானர்ஜி, ஜெயப்பிரதா, அசாருதீன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X