பாலு 'அப்செட்'-விழாவி்ல் கனிமொழி 'ஆப்சென்ட்'!
டெல்லி: தனக்கு அமைச்சர் பதவி மட்டுமல்லாமல், லோக்சபா துணை சபாநாயகர் பதவியையும் தர காங்கிரஸ் மறுத்து விட்டதால் கடும் அப்செட் ஆகியுள்ளார் டி.ஆர்.பாலு.
அதேபோல மத்திய அமைச்சராவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கனிமொழியும், இன்று டெல்லியில் நடந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை.
டெல்லியில் முதல்வர் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களின் தலைகளாக காணப்படுகிறது. முதல்வரின் மனைவி தயாளு அம்மாள், மு.க.அழகிரியின் மனைவி காந்தி, மகன், மகள்கள், தயாநிதி மாறனின் மனைவி, குழந்தைகள், உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் என முதல்வரின் குடும்பமயமாக காணப்பட்டது ராஷ்டிரபதி பவன்.
ஆனால் இவர்களில் கனிமொழி மட்டும் மிஸ்ஸிங். தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டவர் கனிமொழி. ஆனால் கடைசி நேரத்தில் அவர் பதவிப் பட்டியலில் இல்லை. இந்த நிலையில் இன்று நடந்த பதவியேற்பு விழாவின்போது கனிமொழியை அங்கு காண முடியவில்லை.
கனிமொழி டெல்லியில்தான் இருக்கிறார். இருப்பினும் அவர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அவர் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
கடும் அதிருப்தியில் டி.ஆர்.பாலு...
அதேபோல அமைச்சர் பதவி மறுக்கப்பட்ட அதிருப்தியில் டி.ஆர்.பாலு புதுக்கோட்டை அருகே உள்ள தனது கல்லூரிக்குச் சொந்தமான விருந்தினர் இல்லத்தில் தங்கியுள்ளாராம்.
சீனியரான தன்னை காங்கிரஸ் அவமதித்து விட்டதாக கருதுகிறாராம் பாலு. திமுகவும் தன்னை கைவிட்டு விட்டதாக அவர் வருத்தத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications