'ஸ்வைன்'-வெளிநாடு செல்வோர் எண்ணிக்கை குறைந்தது
சென்னை: பன்றிக் காய்ச்சல் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருவதால் வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை குறைந்து விட்டது.
மெக்சிகோவில் தொடங்கி பல்வேறு நாடுகளை வியாபித்து வருகிறது பன்றிக் காய்ச்சல். அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக அமெரிக்காவுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு மத்திய அரசு ஆலோசனை கூறியுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு குறிப்பாக அமெரிக்காவுக்கு செல்வோரின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து சென்னை விமான நிலையத் தரப்பில் கூறுகையில், வெளிநாடு சென்றால் எங்கே நோய் தொற்றி கொள்ளுமோ என்ற பயத்தில் பலர் தங்கள் முன் பதிவு செய்திருந்த விமான டிக்கெட்டுகளை திருப்பபெற்று சென்றுள்ளனர்.
இதனால் சென்னையில் இருந்து வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை குறைந்துள்ளது.
அதே போல் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வருவோர் எண்ணிக்கை 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான விமானங்கள் காலியாக பறந்து கொண்டிருக்கின்றன. நஷ்டத்தையும் சந்தித்து வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் வருபவர்களை அடையாளம் காண்பதற்காக 24 மணி நேரமும் இயங்கக் கூடிய மருத்துவ குழு நிறுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து வரும் அனைவரையும் ஒருவர் விடாமல் இந்தக் குழு பரிசீலித்த பிறகே வெளியில் விடுகிறது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications