செல்போன்-மருந்துகள் விலை குறையும்; தங்கம் உயரும்

அதே நேரத்தில் தங்கம், செட் டாப் பாக்ஸ்கள் ஆகியவற்றின் விலைகள் உயரவுள்ளன.
நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:
தொலைக்காட்சிகளுக்கான செட் டாப் பாக்ஸ்கள் மீது 5 சதவீத சுங்க வரி விதிக்கப்படுகிறது. இதனால் இவற்றின் விலை அதிகரிக்கும்.
அதே நேரத்தில் எல்.சி.டி. தொலைக்காட்சி மீதான சுங்க வரி 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. இதனால் அவற்றின் விலைகள் குறையவுள்ளன.
மொபைல் போன்களின் உதிரிப் பாகங்கள் மீதான 4 சதவீத வரி ரத்து செய்யப்படுகிறது. இதனால் செல்போன்களின் விலையும் குறையவுள்ளது.
தோல் பொருட்கள், ஜவுளி, காலணிகள் மீதான சுங்க வரியும் குறைக்கப்படுவதால் அவற்றின் விலையும் குறையும்.
உயிர் காக்கும் மருந்துகள் மீதான 10 சதவீத இறக்குமதி வரி 5 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. அதே போல இருதய அறுவை சிகிச்சைக்குப் பயன்படும் செயற்கை இருதய வால்வுகள் உள்ளிட்டவை மீதான வரியும் 7.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.
பயோ டீசல் மீதான சுங்க வரி 7.5 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.
தங்கக் கட்டிகள், தங்க நாணயங்கள் மீதான வரி 10 கிராமுக்கு ரூ. 100 என்று இருப்பது ரூ. 200 ஆக உயர்த்தப்படும். அதே போல மற்ற வகையிலான தங்கம் மீதான வரி 10 கிராமுக்கு ரூ. 250 என்று இருப்பது ரூ. 500 ஆக உயர்த்தப்படுகிறது. இதனால் தங்கத்தின் விலை தாறுமாறாக உயரும் என்று தெரிகிறது.
2000 சிசி என்ஜின்களைக் கொண்ட பெரிய கார்கள், வாகனங்கள் மீதான கலால் வரி ரூ. 20,000லிருந்து ரூ. 15,000 ஆகக் குறைக்கப்படுகிறது.
பெட்ரோலால் இயங்கும் லாரிகள் மீதான சுங்க வரி 20 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. அதே போல பெட்ரோலால் இயங்கும் லாரிகள், வாகனங்களின் சேஸிஸ்கள் மீதான வரியும் 20 சதவீதம் பிளஸ் ரூ.10,000லிருந்து 8 சதவீதம் பிளஸ் ரூ. 10,000 ஆகக் குறையும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications