For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பயிற்சி டாக்டர்கள் போராட்டம் தேவைதானா?, நியாயம்தானா?: அரசு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: உதவித் தொகையை உயர்த்தியும், பேச்சுக்குத் தயார் என முதல்வர் கருணாநிதி அறிவித்த பின்னரும் கூட பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தைத் தொடர்வது நியாயம்தானா, தேவைதானா என்று தமிழக அரசு கேட்டுள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

பயிற்சி மருத்துவர்கள் கடந்த மாதம் வரை ரூ.4,500 உதவித்தொகை பெற்று வந்தார்கள். போராட்டம் அறிவித்த நாளன்றே பயிற்சி மருத்துவர்களின் உதவித்தொகையை முதல்-அமைச்சர் ரூ.6 ஆயிரமாக உயர்த்தினார். இந்த உயர்வு போதாதென்று பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மற்ற சில மாநிலங்களில் பயிற்சி மருத்துவர்களின் உதவித் தொகை எவ்வளவு தெரியுமா?

டெல்லி- ரூ.5,700, ஒரிசா- ரூ.5,000, ராஜஸ்தான்- ரூ.5,000, பஞ்சாப்- ரூ.4,500, அரியானா- ரூ.4,500. தமிழ்நாட்டில் தற்போது உதவித்தொகை ரூ.6 ஆயிரம் ஆகும்.

மராட்டிய மாநிலத்தில் பயிற்சி மருத்துவர்களுக்கு இதுவரை 1,700 ரூபாய் மட்டுமே உதவித்தொகையாக வழங்கப்பட்டு வந்தது. அங்கேயும் 6 நாளாக பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். அந்த அரசு 850 ரூபாய் உயர்த்தி தற்போது, 2,550 ரூபாயாக உதவித் தொகையை அறிவித்ததையொட்டி, அங்கே பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

ஆனால், தமிழகத்தில் 6 ஆயிரம் ரூபாய் அளவுக்கு உயர்த்தியும் சாகும் வரை போராட்டம் என்பது சரிதானா?

அது மாத்திரமல்ல; போராட்டத்தை திரும்பப் பெற்று பயிற்சி மருத்துவர்கள், வேறு கோரிக்கை இருப்பின் அதற்கான பேச்சுவார்த்தைக்கு வந்தால், அதற்கும் தயார் என்று திரும்ப, திரும்ப சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் அறிவித்தும், போராட்டத்தை நிறுத்த பயிற்சி மருத்துவர்கள் தயாராக இல்லை என்றால் அதுசரிதானா? நியாயம்தானா? என்று கேட்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X