சிரஞ்சீவிக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கீடு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நடிகர் சிரஞ்சீவியின் பிரஜ்ஜா ராஜ்யம் கட்சிக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு திமுக எதிர்ப்புத் தெரிவிக்கும் என்று தெரிகிறது.

கடந்த மக்களவை, ஆந்திர சட்டசபைத் தேர்தலையொட்டி உருவான கட்சி பிரஜ்ஜா ராஜ்ஜியம் இதற்கு ரயில் என்ஜின் சின்னம் ஒதுக்கப்பட்டது.

ஆனால், தேர்தலில் பெரும் தோல்வி ஏற்பட்டதையடுத்து சின்னத்தை மாற்ற நினைத்த சிரஞ்சீவி தனக்கு உதயசூரியன் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் விணணப்பித்தார். தனது கட்சியின் கொடியி்ல் சூரியன் இருப்பதால் உதயசூரியன் கோரினார்.

இதைப் பரிசீலித்த தேர்தல் கமிஷன் அந்தக் கட்சிக்கு உதயசூரியன் சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

இதற்கு திமுக தரப்பு கூறுகையில், ஆந்திராவில் திமுகவுக்கு ஏராளமான கிளைகள் உள்ளன. இந் நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவால் பெரும் குழ்பபம் ஏற்படும். இது குறித்து முதல்வர் கருணாநிதி ஆலோசித்து முடிவெடுத்த பின் தேர்தல் கமிஷன் உத்தரவை எதிர்த்து அவர்களிடமே முறையிடப்படும் என்றனர்.

திமுக ஒரு மாநிலக் கட்சியாகவே பதிவு செய்யப்பட்டுள்ளதால் அதன் சின்னத்தை வேறு மாநிலத்தில் உள்ள சிரஞ்சீவியின் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.

அதிமுக தன்னை தேசியக் கட்சியாக பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. எமெர்ஜென்சியின்போது மாநிலக் கட்சிக்கு தடை விதிக்கப்படும் என அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மிரட்டியதால் அந்த முடிவை எடுத்தார் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ராமச்சந்திரன்.

ஆனால, திமுக அந்த எச்சரிக்கையை புறம் தள்ளியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+