For Daily Alerts
Just In
சென்செக்ஸ்... ஊசலாட்டமும் சரிவும்!
மும்பை; நேற்றைய வர்த்தகத்தில் சற்றே சுதாரித்த சென்செக்ஸ் இன்று மீண்டும் வீழ்ச்சியைச் சந்தித்தது.
காலை வர்த்தகம் துவங்கியபோது 30 புள்ளிகள் உயர்ந்திருந்த நிலையில், திடீரென சரிவுக்குள்ளானது. ஆனால் பிற்பகலுக்குப் பின் 200 புள்ளிகள் வரை உயர்ந்தது. அதுவும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை.
அடுத்த சில நிமிடங்களுக்குள் மளமளவென விழுந்தது பங்கு வர்த்தக குறியீட்டெண்.
வர்த்தக நேர முடிவில் 226 புள்ளிகளை சென்செக்ஸ் இழந்திருந்தது.
நிப்டியில் 75 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது. ஏசிசி, ரிலையன்ஸ் இன்ப்ரா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், கிராஸிம் போன்றவற்றின் பங்குகள் பெரும் வீழ்ச்சி கண்டன.
டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ, மகிந்திரா அண்ட் மகிந்திரா மற்றும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகளும் நஷ்டத்தில் கைமாறின.
எச்டிஎப்சி நிறுவனப் பங்கு மட்டும் 2 சதவிகித லாபத்தில் கைமாறியது.