For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பனையூர் இரட்டைக் கொலை- சிபிஐ விசாரணைக்கு விட ராமதாஸ் கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

Ramadoss
சென்னை: சென்னை அருகே பனையூரில் நடந்த இரட்டைக் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு அனுப்பி உத்தரவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டாக்டர் ராமதாஸ் கூறுகையில்,

கடந்த மாதம் 27ந் தேதி பாமக தலைவர் ஜி.கே. மணி தலைமையில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் மற்றும் நிபுணர் குழுவினர் டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தின் முன்பாக வாக்குப்பதிவு எந்திரத்தில் தவறு நடைபெறுவதற்கு முகாந்திரம் உள்ளது என்பது குறித்து பேசி வந்திருக்கிறார்கள்.

இந்த எந்திரங்கள் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்பட்டு ஜப்பான் மற்றும் அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அங்குதான் செயல்முறைக்கான சிப் பொருத்தப்படுகிறது.

முன்பு வாக்குச்சீட்டு முறையின் போது தேர்தல் நடவடிக்கை அனைத்துமே முழுக்க முழுக்க தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் இப்போது தேர்தலில் வாக்களிக்கும் எந்திரத்தை தயாரிப்பது, அதன் செயல்முறையை கண்காணிப்பது உள்ளிட்ட எந்த பொறுப்பும் தேர்தல் ஆணையத்திடம் இல்லை.

இந்தநிலையில் தவறுகள் நடப்பதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஒரு வாக்காளர் தான் எந்த சின்னத்திற்கு வாக்களிக்கிறார் என்கிற விவரம் அவருக்கே தெரியாத ஒரு நிலை இதில் இருப்பதால் இந்த முறையை மாற்ற வேண்டும்.

வாக்குப்பதிவு எந்திரத்தில் தவறு செய்ய முடியும் என்பதை நிரூபிப்பதற்கு தேர்தல் ஆணையம் எங்களுக்கு வாய்ப்பளித்திருக்கிறது. விரைவில் உரிய நிபுணர்களுடன் மீண்டும் சென்று நாங்கள் நிரூபிக்க இருக்கிறோம்.

அரசின் திட்டங்களை நான் தொடர்ந்து விமர்சிப்பதற்காக கருணாநிதி என் மீது வசைபாடி யுள்ளார். இவர் 1977 முதல் 1987வரையிலும் 1991 முதல் 1996, 2001 முதல் 2006 வரையிலும் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது அப்போதைய ஆளும்கட்சியை விமர்சிக்கவில்லையா? ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்தவில்லையா?

டிவியில் இவர்களை பற்றி சரியாக செய்தி சொல்லவில்லை என்பதற்காக பேரணி நடத்தி, பொதுக்கூட்டம் போட்டு டிவி பெட்டியையே உடைத்தவர்கள்தானே இவர்கள். எதிர்க்கட்சி குற்றம் சாட்டுவது பிடிக்கவில்லை என்றால், அவர்களை கட்டுப்படுத்த கருணாநிதி தனி சட்டம் கொண்டு வந்து அதை மீறினால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கூட கைது செய்யலாம்.

சமச்சீர் கல்வி என்பது கிராமத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் முதல், வசதி படைத்தவர்கள் வரையிலும் ஒரேவிதமான தரமான கல்வியை கற்க வேண்டும் என்பதுதான். இதை நான் குறிப்பிட்டாலும், கருணாநிதி கோபப்படுகிறார்.

சென்னையை அடுத்த பனையூரில் நடைபெற்ற இரட்டைக் கொலையில் பல மர்ம முடிச்சுக்கள் அவிழ்க்கப்படாமல் உள்ளன. இதில் பிடிபட்ட நபரின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. 10 நாட்கள் ஆகியும் தடய சோதனை விவரங்கள் சிபிசிஐடிக்கு கிடைக்கவில்லையாம்.

இந்த கொலையில் அரசியல் பிரமுகர்கள் பின்னணியில் இருப்பதாக செய்திகள் வருகின்றன. அவர்கள் ஆளும்கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தால் சிபிசிஐடி உண்மையை வெளிக் கொண்டு வர முடியாது. எனவே உடனடியாக இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் வந்து விட்டது. மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகி வருகிறது. வீடுகளை உடைத்து கொலை, கொள்ளை, சங்கிலி பறிப்பு போன்ற சமூகவிரோத செயல்களும் அதிகரித்து விட்டன. கடந்த 3 ஆண்டுகளில் தாதாக்களும் பெருகிவிட்டார்கள் என்றார் ராமதாஸ்.

--

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X