For Daily Alerts
Just In
திஹார் சிறைக்கு ப.சிதம்பரம் விசிட்
டெல்லி: இந்தியாவின் மிகப் பெரிய சிறைச்சாலை என்ற பெயரைப் பெற்ற திஹார் சிறைக்கு இன்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் திஹார் சிறைக்குள் இருந்த ப.சிதம்பரம், 1, 2 மற்றும் 5வது சிறைகளைப் பார்வையிட்டார்.
சிறை அதிகாரிகள், மற்றும் கைதிகளையும் அவர் சந்தித்தார்.
சிறைக் கைதிகளின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நலத் திட்டங்கள் குறித்து அவருக்கு விளக்கிக் கூறப்பட்டது. மேலும், வீடியோ கான்பரன்சிங் உள்ளிட்ட வசதிகள் குறித்தும் விளக்கப்பட்டது.
சிறைச்சாலை மிகவும் சுத்தமாக இருப்பதாகவும், அதன் சூழல் தன்னைக் கவர்ந்திருப்பதாகவும் பின்னர் தெரிவித்தார் ப.சிதம்பரம்.