புதிய அணை கட்ட மத்திய அரசு வாய்மொழியாக அனுமதி - அச்சுதானந்தன்

புதிய அணை கட்டுவது தொடர்பாக மத்திய அரசின் அனுமதியை பெற்று ஆய்வு பணியை மேற்கொள்ளவுள்ளது கேரளா. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புக கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் அச்சுதானந்தன், பலவீனமான முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட ஆய்வு நடத்துவதற்காக, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷிடம் இருந்து வாய்மொழியாக அனுமதி பெறப்பட்டு இருக்கிறது. எழுத்து மூலமாக இன்னும் அனுமதி வரவில்லை.
எனது கவலை எல்லாம், பலவீனமான அணையை சுற்றி வசிக்கும் 50 லட்சம் மக்களின் பாதுகாப்பு பற்றிதான்.
புதிய அணை ஆய்வு பணிக்கு அனுமதி வழங்கப்பட்டதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சியினருக்கு விளக்கம் அளிக்கும் வகையில்தான், கருணாநிதி அவ்வாறு கூறி இருந்தார் என்று தெரிவித்தார்.