For Daily Alerts
Just In
இல.கணேசனுக்கு நெஞ்சுவலி-மருத்துவமனையில் அனுமதி
சென்னை: தமிழக பாஜக தலைவர் இல.கணேசனுக்கு நேற்று மாலை நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.
இல.கணேசனுக்கு சர்க்கரை நோய் உள்ளதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்திய பிறகே இதற்கான அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.