For Daily Alerts
பன்றிக் காய்ச்சல்-இந்தியாவில் பலி 399 ஆனது
டெல்லி: இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 399 ஆக உயர்ந்துள்ளது.
புதன்கிழமையன்று மகாராஷ்டிராவில் மேலும் 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பலி எண்ணி்கை 399 ஆகியுள்ளது.
நாடு முழுவதும் நேற்று 150 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பரவியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,334 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில்...
தமிழகத்தில் புதிதாக 19 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது. இவர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.