For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்டர்நெட் பேனர் விளம்பரத்திற்கு 15 வயசு!

Google Oneindia Tamil News

பெங்களூர்: இணையத் தளத்தில் உலகின் முதல் பேனர் விளம்பரம் வெளியாகி நேற்றுடன் (அக்டோபர் 27) 15 வருடங்களாகி விட்டது.

1994ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி Hotwired.com என்ற இணையத் தளத்தில் வெளியான பேனர் விளம்பரமே, உலகின் முதல் டிஜிட்டல் விளம்பரமாகும்.

ஹாட்வைர்ட் இணையதளம் ஒரு டிஜிட்டல் வர்த்தக இணையத் தளமாகும். இதுவே உலகின் முதல் டிஜிட்டல் வர்த்தக இணையத் தளமும் கூட, வைர்ட் இதழின் இணையத் தளப் பதிப்பும் ஆகும்.

டிஜிட்டல் விளம்பரம் குறித்து பி அன்ட் ஜி நிறுவனத்தின் தலைவரான எட் அர்ட்ஸ்ட் 1994ம் ஆண்டு மே மாதம் முதல் முறையாக விழிப்புணர்வுப் பேச்சை நிகழ்த்தினார். டிஜிட்டல் விளம்பரமே இனி வர்த்தக உலகின் புதிய எதிர்காலமாக இருக்கும். அதற்கு அனைவரும் மாற வேண்டும். இல்லாவிட்டால் தனிமைப்படுத்தப்படுவோம் என்று அவர் கூறினார்.

அவரது பேச்சைக் கேட்ட மெஸ்னர் வெட்ரே பெர்ஜர் மெக்நாமி ஸ்மாட்டரர் நிறுவனத்தின் தலைவரான பாப் ஸ்மிட்டரருக்கு புதிய உற்சாகம் பிறந்தது. இதையடுத்து ஒரு விளம்பரத்தை உருவாக்கும் பணியை முடுக்கி விட்டார் பாப்.

இன்டர்நெட்டில் விளம்பரம் என்பது அப்போது புதிது என்பதால் சும்மா போட்டு பார்ப்போம் என்ற எண்ணமே அப்போது பாப் மற்றும் அவரது குழுவினரிடம் இருந்தது.

பின்னர் ஏதாவது ஒரு நிறுவனத்தின் பெயரை இதில் பயன்படுத்தினால் என்ன என்ற எண்ணம் தோன்றவே சிலரை அணுகினர். அதன்படி தொலைத் தொடர்பு நிறுவனமான எம்.சி.ஐ, வோல்வோ நிறுவனம், கிளப்மெட், 1-800 கலெக்ட், ஏடி அன்ட் டி, ஜிமா ஆகியவை விளம்பரம் தர முன் வந்தன..

இந்த ஆறு நிறுவனங்களின் பெயர்களையும் வைத்து பேனர் விளம்பரம் தயாரிக்கப்பட்டது. அப்போது இருந்த வெப் பிரவுசர் மொசைக் (பின்னர் நெட்ஸ்கேப் எக்ஸ்புளோரர் வந்து மொசைக்கை விரட்டி விட்டது).

மேலும், இப்போது போல பிராட்பேண்ட்டும் கிடையாது. டயல் அப் மட்டுமே. அதிகபட்ச வேகமே 24.4 கேபிபிஎஸ் தான். அமெரிக்காவில் இன்டர்நெட் வைத்திருந்தவர்கள் எண்ணிக்கை அப்போது 20 லட்சம்தான்.

இப்படிப்பட்ட நிலையில்தான் அந்த 6 நிறுவனங்களின் பெயர்களையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கிராபிக்ஸ் பேனர் விளம்பரங்கள் இடம் பெற்றன. இன்டர்நெட்டில் இடம் பெற்ற உலகின் முதல் விளம்பரங்கள் என்ற பெருமையை இந்த ஆறு நிறுவனங்களின் பெயர்களும் பெற்றன.

இந்த பேனர் விளம்பரங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே சோதனை ரீதியாக வெளியிடப்பட்ட இந்த பேனர் விளம்பரங்கள், உலகின் முதல் டிஜிட்டல் விளம்பரம் ஒரு வழியாக வெற்றி பெற்றது- பின்னர் நடந்தது வரலாறு.

வோல்வோ நிறுவனம் இந்த விளம்பர வெற்றியால் மகிழ்ச்சி அடைந்தது. இருப்பினும் விளம்பரத்தை கிளிக் செய்து வாடிக்கையாளர்கள் தங்களை அணுகுவதை அது விரும்பவில்லை.

அதற்கு சுவாரஸ்யமான காரணம் இருந்தது- முதலில் ஆன்லைன் மூலம் தங்களை அணுகும் வாடிக்கையாளர்ளை எப்படி கையாளுவது என்பது குறித்து அதற்குத் தெரியாமல் இருந்தது.

2வது, சட்ட ரீதியான பிரச்சினைகள் வந்து விடுமோ என்ற குழப்பம் ஒரு பக்கம். இதனால் விளம்பரத்தை கிளிக் செய்து பார்க்கும்படியாக அதை வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியது வோலவோ.

எனவே வோல்வோ நிறுவனத்தின் லோகோ மற்றும் ஒரு வாகனத்தின் படம் மட்டுமே அந்த பேனர் விளம்பரத்தில் இடம் பெற்றதாம்.

இருப்பினும் அப்படியே விட்டால் நலமாக இருக்காது என்று எண்ணிய பாப் குழுவினர், வோல்வோ பேனரை கிளிக் செய்து உள்ளே போன பின்னர் ஒரு கொஸ்டினர் வருவது போல வடிவமைத்திருந்தனர். அதில் உங்களுக்கு எந்த வோல்வோ கார் பிடிக்கும் என்ற கேள்வியைக் கேட்டிருந்தனர்.

இப்படி விளையாட்டு போல ஆரம்பிக்கப்பட்ட டிஜிட்டல் விளம்பரம் இன்று எப்படி உள்ளது?. இன்றைய டிஜிட்டல் விளம்பர வர்த்தகத்தின் மதிப்பு 24 பில்லியன் டாலர்களாம்!.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X