For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டம்-ஒழுங்கு: மேற்கு வங்கத்தில் மத்திய குழு

By Staff
Google Oneindia Tamil News

கொல்கத்தா: மக்​க​ளவை தேர்​த​லுக்​குப் பின் மேற்கு வங்கத்​தில் நடந்த அர​சி​யல் மோதல்​கள், நக்ஸல் வன்முறைகள் குறித்து விசா​ரிக்க மத்​திய அர​சால் அனுப்​பப்​பட்ட 3 உறுப்​பினர் உயர்​நி​லைக் குழு அந்த மாநிலத்தி்ல் விசா​ர​ணை நடத்தியது.

ஆனால், திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் ரயில்வே அமைச்சருமான மம்தா பானர்ஜி கூறிய பகுதிகளுக்குச் சென்று விசாரணை நடத்தும் திட்டத்தை அந்தக் குழு ரத்து செய்துவிட்டது.

இந்தக் குழுவில் வருகைக்கு மாநிலத்தை ஆளும் இடதுசாரி அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. முடிந்தால் ஆட்சியைக் கலைத்துப் பார்க்குமாறும் சவால் விட்டது.

ஆனால், ​சட்​டம்,​ ஒழுங்கை நிலை​நாட்ட மாநில அர​சுக்கு உத​வி​ செய்​யவே இந்​தக் குழு அனுப்​பப்பட்டதாக மத்​திய உள்​துறை அமைச்​சர் ப.சிதம்​ப​ரம் டெல்லியில்
நிரு​பர்​க​ளிடம் தெரி​வித்​தார்.

மத்​திய உள்​துறை அமைச்​ச​க கூடு​தல் செய​லாளர் டி.ஆர்.எஸ். செளத்ரி தலை​மை​யி​லான இந்​தக் ​கு​ழு​வில் உள்​துறை இயக்​குனர் நீரஜ் கன்​சால்,​ இணை இயக்​கு​னர் என்.கே. மிஸ்ரா ஆகி​யோர் இடம் பெற்​றிருந்தனர்.

இந்தக் குழு மேற்கு வங்க தலை​மைச் செய​லா​ளர் அசோக் மோகன் சக்​ர​வர்த்தி,​ உள்​துறைச் செய​லா​ளர் அர்​தேந்து சென்,​ மாநில காவல்​து​றைத் தலை​வர் பூபிந்​தர் சிங்,​ உள​வுப்​பி​ரி​வுத் தலை​வர் அப​ரா​ஜித முகர்ஜி உள்​ளிட்ட மூத்த அதி​கா​ரி​க​ளி​டம் நீண்ட நேரம் விசா​ரணை நடத்​தி​னர்.

லால்கர் பகுதியி்ல் இட​து​சாரி ஆத​ர​வா​ளர்​க​ளுக்​கும் திரிண​​மூல் காங்​கி​ரஸ் ஆத​ர​வா​ளர்​க​ளுக்​கும் இடை​யில் நடந்த மோதல் சம்​ப​வங்​கள் குறித்து விசா​ரித்​த​னர்.

மோதல் எந்​தச் சூழ்​நி​லை​யில் நடந்​தது,​ மாநில அரசு அதைத் தடுக்க எடுத்த நடவடிக்கைகள்என்ன,​ எத்​தனை பேர் மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்​டது,​ எத்​தனை பேர் கைது செய்​யப்​பட்​ட​னர்,​ சம​ர​சம் ஏற்​பட எடுத்த நட​வ​டிக்​கை​கள் என்ன என்​றெல்​லாம் கேட்​கப்​பட்​டது.

மத்​தி​யக் குழு​வி​னர் தங்​க​ளி​டம் விசா​ரணை நடத்​திய பிறகு தலை​மைச் செய​லர் அசோக் மோகன் சக்​ர​வர்த்தி,​ முத​ல்வர் புத்​த​தேவ் பட்​டா​சார்​ஜி​யைச் சந்​தித்து விசாரணை குறித்த விவ​ரத்தைத் தெரி​வித்​தார்.

'மழுப்பல்' சிதம்​ப​ரம்:

இந்த குழுவின் விசாரணை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில்,​ மத்​தி​யக் குழு​வி​னர் மேற்கு வங்​கம் சென்​றது அர​சி​யல் சட்ட விரோத நட​வ​டிக்கை அல்ல,​ சட்​டத்​துக்கு உள்​பட்டே அவர்​கள் சென்​றுள்​ள​னர்.

மாநி​லத்​தின் சட்​டம்,​ ஒழுங்கு நிலைமை மேம்​பட மாநில அர​சுக்கு உத​வ​வும் அர​சி​யல்​ரீ​தி​யி​லான மோதல் சம்​ப​வங்​களை முடி​வுக்​குக் கொண்​டு​வ​ர​வும்​தான் அவர்​கள் சென்​றுள்​ள​னர். இதில் அர​சி​யல் உள்​நோக்​கமோ,​ ஆட்​சி​யைக் கலைக்​கும் சதியோ ஏதும் இல்லை என்றார்.

மத்திய அரசுக்கு இடதுசாரிகள் சவால்:

இட​து​சாரி முன்​ன​ணி​யின் அமைப்​பா​ளர் பிமன் போஸ் இந்த விசாரணை குறித்து கூறுகையில்,

சட்​டம்,​ ஒழுங்கு கெட்​டு​விட்​டது என்று கூறி அர​சி​யல் சட்​டத்​தின் 356-வது பிரி​வின் கீழ் மேற்கு வங்க அர​சைக் கலைத்​துப் பாருங்​கள். ​மத்திய அரசுக்கு அந்த தைரியம் உண்டா. இந்த விசாரணை பூச்சாண்டிக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்.

இந்த விசாரணைக்கான விளைவை மத்திய அரசு நிச்சயம் அனு​ப​விக்கும்.

மூத்த மார்க்சிஸ்ட் தலைவரான சீதாராம் யெச்​சூரி கூறுகையில்,

மாநி​லத்​தில் சட்​டம்,​ ஒழுங்கு நிலைமை எப்​படி இருக்​கி​றது என்று ஆரா​யத்​தான் மத்​தி​யக் குழு அனுப்​பப்​பட்​டி​ருக்​கி​றது என்று மத்​திய அர​சில் இடம் பெற்​றுள்ள திரி​ண​மூல் காங்​கி​ரஸ் கட்​சி​யின் தலை​வர் மம்தா பானர்ஜி கூறு​கி​றார்;.

மாநில அர​சுக்கு உத​வத்​தான் குழு செல்​கி​றது என்று உள்​துறை அமைச்​சர் ப. சிதம்​ப​ரம் கூறு​கி​றார். இதில் ஏது உண்மை?.

இந்​திரா காந்தி படு​கொ​லைக்​குப் பின் டெல்​லி​யில் நடந்த சீக்​கி​யர்​கள் படு​கொலை,​ கோத்​ரா​வில் ரயில் எரிப்​புக்​குப் பிறகு குஜ​ராத்​தில் நடந்த மதக் ​க​ல​வ​ரம்,​ மும்​பை​யில் நடந்த மதக் ​க​ல​வ​ரம் ஆகிய எதி​லுமே குற்​றம் செய்​த​வர்​கள் தண்​டிக்​கப்​ப​ட​வில்லை. இப்படிப்பட்ட மத்திய அரசு தான் இங்கு வந்து விசாரணை நடத்த வந்துவிட்டது என்றார்.

மேலும் இந்தக் குழுவை சந்தித்த இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த அரசியல் வன்முறைகளுக்கு திரிமணமூல் காங்கிரஸ் எப்படியெல்லாம் காரணமாக இருந்தது என்பது குறித்த அறிக்கையையும் அளித்தனர்.

முன்னதாக மாநில அரசு அதிகாரிகளுடன் மதிய உணவருந்திக் கொண்டிருந்த மத்திய அரசு அதிகாரிகளை சாப்பிடும் இடத்துக்கே வந்து திட்டினார் திரிமணமூல் காங்கிரஸ் எம்பியான கல்யாண் பானர்ஜி.

நீங்கள் இங்கே விசாரணை நடத்த வந்தீர்களா.. சோறு திங்க வந்தீர்களா என்று பலர் முன்னிலையில் கேட்டு அவமானப்படுத்தினார்.

இந் நிலையில் இன்று மம்தா பானர்ஜி சொன்ன இடங்களுக்குச் சென்று விசாரிக்க இருந்த அந்தக் குழு தனது திட்டத்தை ரத்து செய்துவிட்டது.

இன்று பல மாவட்ட கலெக்டர்கள், எஸ்பிக்களையும் சந்தி்க்கும் இந்தக் குழு தனது பயணத் திட்டத்தை குறைத்துக் கொண்டு இன்றே டெல்லி திரும்பவுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X