பனி: டெல்லியில் விமானங்கள் தாமதம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் தொடர் பனிப்பொழிவு காரணமாக விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
டெல்லி விமான நிலையத்தில் இருந்து சென்னை, ஸ்ரீநகர், அமிர்தசரஸ், பாட்னா ஆகிய இடங்களுக்கு இன்று காலை விமானங்கள் தாமதமாகவே புறப்பட்டன.
டெல்லியில் இருந்து இன்று காலை சென்னைக்கு புறப்பட்ட 2 விமானங்களுமே பனிப்பொழிவால் தாமதமாக கிளம்பின.
இதேபோல், இரண்டு ஸ்ரீநகர் விமானங்கள், பாட்னா மற்றும் அமிர்தசரஸ் விமானங்களும் ஒரு மணிநேர தாமதத்துக்கு பின்னரே டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றன.
விமான நிலைய ஓடுதளத்தில் 700 மீட்டர் தொலைவுக்கு அப்பால் எதுவும் தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு இருந்ததாக இந்திராகாந்தி சர்வதேச விமான நிலைய வானிலை மைய இயக்குனர் ஜெனமணி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications