For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2010-11ல் விவசாயிகளுக்கு ரூ. 2500 கோடிக்கு பயிர்க்கடன்

By Staff
Google Oneindia Tamil News

Anbalagan
சென்னை: 2010-11ம் ஆண்டில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க ரூ. 2500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் அன்பழகன் இன்று சட்டசபையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் விவசாயம் மற்றும் விவசாயத்துறை சார்ந்த அறிவிப்புகள் விவரம்:

- கூடுதலாக 4.5 லட்சம் ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்யும் வகையில் ஏரிகள் புனரமைப்பு

- விவசாயிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட சுய உதவிக் குழுக்கள் சிறப்பாக செயல்படுகின்றன.

- முல்லைப் பெரியாறு அணை ஆய்வுக் குழுவை ஏற்பதில்லை என்ற தமிழக அரசின் முடிவில் மாற்றம் இல்லை

- உணவு மானியத்திற்கு ரூ. 3750 கோடி ஒதுக்கீடு.

- நிலத்தடி நீர் ஆதாரத்தைப் பெருக்க ரூ. 100 கோடி ஒதுக்கீடு

- காவிரியில் கதவணை அமைக்க ரூ. 193 கோடி ஒதுக்கீடு

- நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ. 200 கோடி

- தாமிரபரணி, நம்பியாறு ஆறுகள் இணைப்புக்கு ரூ. 126 கோடி

- பரம்பிக்குளம், ஆழியாறு கால்வாயை சீராக்க ரூ. 127 கோடி

- ரூ. 439 கோடியில் ஏரிகள், குளங்கள் புனரமைப்புத் திட்டம்.

- ரூ. 609 கோடியில் வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

- விவசாய சுய உதவிக் குழுக்களுக்கு உதவ ரூ. 10 கோடி சுழல் நிதி ஒதுக்கீடு.

- கூடுதலாக 10 ஆயிரம் விவசாய சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும்.

- விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க மின் வாரியத்திற்கு ரூ. 295 கோடி மானியம்.

- 2010-11ல் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க ரூ. 140 கோடி

- கரும்பு விவசாயிகளுக்கு ஆதார விலை டன் ஒன்றுக்கு ரூ. 50 உயர்த்தப்பட்டு ரூ. 1650 மற்றும் அரவைக் கூலி மற்றும் போக்குவரத்து செலவு உள்பட ரூ. 2000 ஆக வழங்கப்படும்.

- செம்மை நெல் சாகுபடித் திட்டம் 6.25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்தப்படும்.

- சன்னரக நெல் குவின்டால் ஒன்றுக்கு ரூ. 1,100 வழங்கப்படும்

- சொட்டு நீர்ப்பாசனத் திட்டம் 77,000 ஏக்கர் நிலத்தில் விரிவுபடுத்தப்படும்.

- விவசாயிகளுக்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 891 கோடி பயிர் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது

- இந்த ஆண்டு விவசாயிகளுக்கு ரூ. 2,500 கோடி பயி்ர் கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆற்றுப் படுகைகளில் தேக்கு மரம் வளர்க்கும் திட்டத்திற்கு ரூ. 10 கோடி ஒதுக்கீடு என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X