தனியார் பள்ளிகளில் கட்டணத்தைக் குறைக்கக் கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம்
சென்னை: தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தைக் குறைக்கக் கோரி இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை பள்ளி கல்வி இயக்ககம் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்துள்ள கல்வி கட்டணத்தை குறைக்க வேண்டும், அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசே ஏற்று நடத்த வேண்டும், பள்ளி முதல் கல்லூரி வரை விஞ்ஞான பூர்வ இலவச கல்வி வழங்க வேண்டும்.
அரசு பள்ளிகள் அனைத்தும் தரம் உயர்த்த வேண்டும், தனியார் பள்ளிகளில் நன்கொடை வசூலிக்கும் கல்வி வியாபாரிகளை தடை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் ரெஜீஸ்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று வருகின்றனர். இந்த சமயத்தில் அரசு பள்ளிகளை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளியில் படித்த நெல்லை மாணவிதான் 10ஆம் வகுப்பில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
கல்லூரிகளில் கூட நுழைவுத் தேர்வை எடுத்து விட்டார்கள். ஆனால் தனியார் பள்ளிகளில் பி.கே.ஜி. சேருவதற்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. கல்விக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகளை அரசு ஏற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
-
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ












Click it and Unblock the Notifications