For Daily Alerts
Just In
பங்குச் சந்தை சரிவு எதிரொலி-ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது
சிங்கப்பூர்: அமெரிக்க பங்குச் சந்தை சரிவைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை ஆசிய சந்தையில் மேலும் சரிந்துள்ளது.
அமெரிக்காவில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 13 சென்ட் குறைந்து 75.81 டாலராக இருந்தது. லண்டனில் 23 சென்ட் குறைந்து 75.21 ஆக இருந்தது.
நேற்று மட்டும் 2 டாலர் அளவுக்கு கச்சா எண்ணெய் விலை குறைந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா பொருளாதார மீட்சி நடவடிக்கைகள் இன்னும் வேகம் பிடிக்காதது இந்த சரிவுக்குக் காரணமாக கருதப்படுகிறது.
Story first published: Wednesday, June 30, 2010, 11:12 [IST]