For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தனியார் பொறியியல் கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் ரெய்ட்-பங்காரு அடிகளாரிடம் விசாரணை

By Chakra
Google Oneindia Tamil News

Melmaruvathur
சென்னை& மேல்மருவத்தூர்: தமிழகம் முழுவதும் பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் இன்று ரெய்ட் நடத்தினர்.

மாணவர் சேர்க்கைக்காக பல்வேறு கல்லூரிகள் ஏராளமான அளவி்ல் நன்கொடை வசூலித்து வரும் நிலையில் இந்த ரெய்ட் நடந்து வருகிறது. இதனால் இன்று பல கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் நடக்கவில்லை.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் சார்பில் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து அந்தக் கல்லூரிகளின் தாளாளரும் பங்காரு அடிகளாரின் மகனுமான அன்பழனின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பின்னர் கோவிலில் வைத்து பங்காரு அடிகளாரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பங்காரு அறக்கட்டளை தான் இந்தக் கல்லூரிகளையும் கல்வி நிறுவனங்களையும் நடத்துகிறது. அவை உரிய வரி செலுத்தாததால் இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அன்பழகன் தனது தந்தையுடன் ஒரே வீட்டில் வசித்து வருவது குறி்ப்பிடத்தக்கது. இந்த வீட்டிலும் மேல்மருத்துவத்தூர் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் ஒரே நேரத்தில் சுமார் 200 அதிகாரிகள் சோதனைகள் நடந்தினர்.

ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி தாளாளர் ஸ்ரீதேவி வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இவர் பங்காரு அடிகளாரின் மூத்த மகள் ஆவார். இவரும் மேல்மருவத்தூரில் தான் வசிக்கிறார்.

அதே போல நாகர்கோவில் சன் கல்லூரியிலும் சோதனை நடந்தது. இந்தக் கல்லூரிக்கு சமீபத்தில் அங்கீகாரத்தை ரத்து செய்தது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சென்னையில் ஆவடியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பொறியியல் கல்லூரி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்தக் கல்லூரியின் நிர்வாக அலுவலகம் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ளது. அந்த அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.

அதேபோல கும்மிடிப்பூண்டி ஆர்.எம்.கே. கல்லூரி, தாம்பரம் சாய்ராம், மதுரவாயலில் உள்ள எம்.ஜி.ஆர். கல்லூரி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பல பொறியியல் கல்லூரிகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

கோவை கற்பகாம்பாள் நிகர்நிலை பல்கலைக்கழகத்திலும் சோதனை நடக்கிறது.

இந்த சோதனைகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

சோதனை நடைபெறுவதால் பல கல்லூரிகளில் இன்று மாணவர் சேர்க்கை நடக்கவில்லை. வருமான வரித்துறையினரின் சோதனைகள் இரவு வரையும் தொடர்ந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X