For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறப்பு ரயில்கள் மேலும் 2 மாதங்கள் நீட்டிப்பு: தெற்கு ரெயில்வே

Google Oneindia Tamil News

சென்னை: திருச்சியில் இருந்து பெங்களூருக்கும், பெங்களூரில் இருந்து திருச்சிக்கும் தினசரி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சிறப்பு ரயில்களின் இயக்கம் இன்னும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

திருச்சியில் இருந்து பெங்களூருக்கு செல்லும் ரயிலின் இயக்கம் செப்டம்பர் மாதம் 13-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் மாலை 6.45 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு காலை 5 மணிக்கு பெங்களூரை சென்றடையும்.

பெங்களூரில் இருந்து திருச்சிக்கு விடப்பட்டுள்ள விரைவு ரயிலின் (எண் - 0670) இயக்கம் வரும் 16-ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 16-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் இரவு 10.15 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டு காலை 8.30 மணிக்கு திருச்சியை வந்தடையும்.

இந்த 2 ரயில்களும் ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், சின்னசேலம், ஆத்தூர், சேலம் நகரம், சேலம், திருப்பத்தூர், குப்பம், பங்காருப்பேட்டை, ஒயிட்பீல்ட், கிருஷ்ணராஜபுரம், பெங்களூர் கண்டோன்மென்ட் ஆகிய இடங்களில் மட்டும் நின்று செல்லும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X