For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை செல்ல ரயி்ல் டிக்கெட்டுகள் முன்பதிவு 6 நிமிடத்தில் காலி: மக்கள் அவதி

By Chakra
Google Oneindia Tamil News

நெல்லை: தீபாவளி விடுமுறை முடிந்து நெல்லையில் இருந்து சென்னை உள்ளி்ட்ட தொலைதூர நகரங்களுக்கு செல்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று துவங்கிய 6 நிமிடத்தி்ல் முடிந்தது.

பயண தேதிக்கு 90 நாட்களுக்கு முன் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 5-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வெளியூரில் வசிக்கும் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு வர ஏற்கனவே நவம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் பயணிக்க டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளனர். தீபாவளி பண்டிகை முடிந்து நவம்பர் 7-ம் தேதி வெளியூர் செல்பவர்களுக்கான முன்பதிவு நேற்று துவங்கியது. இதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மக்கள் ரயில் நிலையத்தில் தவம் கிடந்து இடம் பிடித்தனர். நேற்று காலை டிக்கெட் முன்பதிவு மையங்கள் முன்பு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு முன்பதிவு துவங்கியது.

ஆனால் துவங்கிய 6 நிமிடத்தில் நெல்லையில் இருந்து சென்னை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் டிக்கெட்டுகள் காலியானது. 10வது நிமிடத்தி்ல் காத்திருப்போர் பட்டியல் 100ஐ தாண்டியது. இதே போல் கன்னியாகுமரி, ஆனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்களின் முன்பதிவும் துவங்கிய 9 நிமிடத்தில் டிக்கெட்டுகள் அனைத்தும் காலியாகி விட்டன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X