For Daily Alerts
காசோலை வழக்கு: ஜெயலலிதா மனு- உயர் நீதிமன்றம் நிராகரிப்பு

1992ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் அவரது பிறந்தநாளின்போது வந்த ரூ.2 கோடி மதிப்பிலான காசோலைகள் வந்தன. இதை ஜெயலலிதா தனது சொந்த வங்கி கணக்கில் போட்டுக் கொண்டார்.
இதை எதிர்த்து சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. கடந்த 14 ஆண்டுகளாக இந்த வழக்கு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந் நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரும் மனுவை அவசர மனுவாக எடுத்து விசாரிக்க வேண்டுமென்று ஜெயலலிதா சார்பில் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முகசுந்தரம் இந்த கோரிக்கையை முன் வைத்தார்.
ஆனால், இதை நீதிபதி சி.டி.செல்வம் நிராகரித்துவிட்டார். வழக்கமான முறையில் பதிவுத் துறையில் பதிவு செய்த பின்னரே இந்த மனுவை விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.